×

நரிக்குறவர், குருவிக்காரர் உட்பிரிவினர் பழங்குடியினர் வகுப்பில் இணைப்பு

ஈரோடு, செப்.14: நரிக்குறவர், குருவிக்காரர் உட்பிரிவினர், பழங்குடியினர் வகுப்பில் இணைக்கப்பட்டதையடுத்து சாதிச்சான்றின் அடிப்படையில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து, கலெக்டர் ராஜகோபால் சுன்கரா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: கடந்த 17.03.2023 நாளிட்ட, ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் (சிவி1) துறை, அரசாணை (நிலை) எண் 38ல் நரிக்குறவர் மற்றும் குருவிக்காரர் உட்பிரிவினரை மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பிலிருந்து பழங்குடியினர் வகுப்பில் இணைத்து ஆணை வெளியிடப்பட்டுள்ளது.

இதையடுத்து, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை ஆணையரின் சுற்றறிக்கையில் இனி வரும் காலங்களில் நரிக்குறவர் மற்றும் குருவிக்காரர் உட்பிரிவினரை சாதிச்சான்று அடிப்படையில் பழங்குடியினராக பதிவு செய்தல் வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே, ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் தனது கல்வி தகுதியினை பதிவு செய்துள்ள நரிக்குறவர் மற்றும் குருவிக்காரர் உட்பிரிவினர்கள் தொடர்புடைய துறையின் வாயிலாக புதிய சாதிச்சான்றிதழ் பெற்று, ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தை நேரில் அணுகி பழங்குடியினராக பதிவு செய்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தை நேரிலோ அல்லது தொலைபேசி எண் 0424-2275860 மூலமாகவோ தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

The post நரிக்குறவர், குருவிக்காரர் உட்பிரிவினர் பழங்குடியினர் வகுப்பில் இணைப்பு appeared first on Dinakaran.

Tags : Fox ,Erode ,Foxes ,
× RELATED சட்டவிரோத மது விற்பனை; பெண் உள்பட 7 பேர் கைது